Tuesday, May 11, 2010

அவள் யார்..?

தாமரை போல் மலர்ந்த முகமோ,

வேல் போல் கூர்ந்த கண்களோ,

நீர் சுழல் போல் கன்னக்குழிகளோ,

முத்துகளை பதுக்கிய ரோஜா இதழ்களோ,

ரவிவர்மன் கற்பனை ஒப்ப வடிவமோ,



அவள்..
அன்பில் சிறந்தவளோ,

அறிவில் அளவற்றவளோ,

தன்னம்பிகையில் சிகரமோ,

என் தோழி அவளோ,

என் தாய் போல் வருவாளோ,

இவை..
என் கற்பனையோ,

என் பேராசையோ,

என் உயிர் துணை யார் என்ற யோசனையோ..?

தெரியவில்லை..!

இது..
எதிர்பார்ப்புகளின் ஆரம்பம் மட்டுமே..,

முழுவதும் எழுத காகிதம் போதாது..!

முதியோர் இல்லங்கள்

புது பிறப்புகள் இல்லாமல் பெருகி வரும் குடும்பங்கள்..!

பால் குடி மறக்க தள்ளி வைத்த தாய்யை ,

பழிவாங்க மகன் தாய்யை கொண்டு சேர்க்கும் இடம்..!

படி தாண்டவிடாமல் பேணி வளர்த்த தந்தையை,

படிஏறாவிடாமல் மகள் தந்தையை தள்ளி செல்லும் இடம்..!

'பாவம்'...இன்று நாம் செய்வது நம்மக்கும் கிடைக்கும்,

என்பதை உணரா பிள்ளைகள் விரும்பிய தனித்தீவுகளாய் வாழ,

பெற்றோர் கூடி வாழும் இடம் இந்த "முதியோர் இல்லங்கள் "..!

என் சொர்க்கம்

இது என்ன நெஞ்சில் ஒரு ஏக்கம்,

இது உன்னால் ஏற்பட்ட தாக்கம்,

பல நேரங்களில் மனதில் ஏற்படும் தேக்கம்,

சில நொடிகளில் உன்னை நினைத்தால் வரும் ஊக்கம்,

கண்களில் இருந்து பிடுங்கினாய் என் தூக்கம்,

இனி நீ இருக்கும் இடம் தான் என் சொர்க்கம்....!

Saturday, October 25, 2008

முதல் அந்தாதி முயற்சி..!


சித்திரை திங்கள்,

திங்கள் காய்ந்த இரவில்,

கனவின் விழும்பில் சட்டென விழித்தேன்,

விழித்து விட்டேன் எனவும் அகத்திற்க்கும் புறத்திற்க்கும் தெரியாது,

தெரியாத நிலையில் குளிர் மார்கழியில் பூத்த 'மஞ்சள்' பூ,

பூவா...! இது பூவா..! "சாமந்தி நிறத்தில்" என திகைக்கும் வேளையில்,

வேளை அதிகாலையில் மஞ்சள் பூசிய அவளது அரும்பு முகம் விழி அருகில்..!

நண்பன்

வேலையில் நீ அவனை மறந்தாலும்,
வேளையில் உனக்கு உதவி செய்வான்..!

அம்மாவை தவிற..!

உரிமை எடுப்பாள்,
உன்னையே உலகம் என்பாள்,
உறவை ஏற்படுத்துவாள்,
உன் உறவை முறிப்பாள்,
உன் உயிரை உடனிருந்து எடுப்பாள்,

இவை எதையும் ஒரு நிமிடத்தில் செய்வாள் பெண்..!

காதலில் இன்பம்..!

"காதலில் இன்பம் உனக்காக காத்து இருப்பதில் தான்",
சொன்னேன் அவளை பார்த்து அன்று,
"உன் இன்பம் தொடர என்றும் காத்திரு கல்லறையில்",
சொல்லிச் சென்றாள் என்னை பார்த்து இன்று..!