Saturday, October 25, 2008

முதல் அந்தாதி முயற்சி..!


சித்திரை திங்கள்,

திங்கள் காய்ந்த இரவில்,

கனவின் விழும்பில் சட்டென விழித்தேன்,

விழித்து விட்டேன் எனவும் அகத்திற்க்கும் புறத்திற்க்கும் தெரியாது,

தெரியாத நிலையில் குளிர் மார்கழியில் பூத்த 'மஞ்சள்' பூ,

பூவா...! இது பூவா..! "சாமந்தி நிறத்தில்" என திகைக்கும் வேளையில்,

வேளை அதிகாலையில் மஞ்சள் பூசிய அவளது அரும்பு முகம் விழி அருகில்..!

நண்பன்

வேலையில் நீ அவனை மறந்தாலும்,
வேளையில் உனக்கு உதவி செய்வான்..!

அம்மாவை தவிற..!

உரிமை எடுப்பாள்,
உன்னையே உலகம் என்பாள்,
உறவை ஏற்படுத்துவாள்,
உன் உறவை முறிப்பாள்,
உன் உயிரை உடனிருந்து எடுப்பாள்,

இவை எதையும் ஒரு நிமிடத்தில் செய்வாள் பெண்..!

காதலில் இன்பம்..!

"காதலில் இன்பம் உனக்காக காத்து இருப்பதில் தான்",
சொன்னேன் அவளை பார்த்து அன்று,
"உன் இன்பம் தொடர என்றும் காத்திரு கல்லறையில்",
சொல்லிச் சென்றாள் என்னை பார்த்து இன்று..!

Monday, October 20, 2008

நான்...?

காட்டு மழையில் குடை இல்லாமல் நனையும் குயவனை போல்,
கவிதை மழையில் காதல் இல்லாமல் நனையும் இளைஞன்.

Sunday, October 19, 2008

நீ என் அருகில் இல்லை என்றால்...!

ஷாஜஹான் கட்டிடம் வெறும் குவிந்த கற்கள்,
ரவிவர்மன் ஓவியம் வெறும் கழந்த நிறங்கள்,
கம்பன் கவிதையும் வெறும் கோர்த்த எழுத்துக்கள்,
யாரும் செதுக்காத 'சிலையே..........!',
நீ என் அருகில் இல்லை என்றால்...!.

உழைப்பாளி

கனவை நோக்கி எறிக்கும் ஞாயிறில் வேலை செய்தேன்,
ஐயகோ...! ஞாயிறு கிழமையே கனவாகி விட்டதே..!

வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியனின் ......................

மாதத்திற்கு யார் குறித்தார் 30 நாட்கள் மட்டும்,
நண்பர்களுடன் பேசி பல மாதங்கள் ஆகிறது..!
வாரத்திற்கு யார் குறித்தார் 7 நாட்கள் மட்டும்,
உடன் பிறந்தவர்களுடன் பேசி பல வாரங்கள் ஆகிறது..!
நாளைக்கு யார் குறித்தார் 24 மணி நேரம் மட்டும்,
பெற்றோர் உடன் பேசி பல நாட்கள் ஆகிறது..!
நிமிடத்திற்கு யார் குறித்தார் 60 வினாடிகள் மட்டும்,
அவள் உடன் பேசி சில நிமிடங்கள் ஆகிவிட்டது.
யார் குறித்தால் என்ன...!..?
இவற்றில் கண்ணை உறுத்தும் 'பெரிய' பிரிவுடன் உடனே நான் பேச வேண்டும்.
(கைகள் 'மறுபடியும்' சுழற்றுகிறது அவள் தொலைபேசி எண்..!
கை 'கண்ணின் கணக்கு' படி மட்டும் செயல்படுகிறது.)

பேசுங்கள் கொஞ்சம்...!

பல நாட்களாய் என் தொலைபேசியை உறக்கத்திற்கு தள்ளி,
என்னை விழிக்க வைத்த நண்பர்கள்,
சில நாட்களாய் என்னை உறங்கினாயா என்று
கூட கேட்காமல் விட்டது ஏன்...?
இதற்கு பதில் அனுப்பாதீர்கள்...!
என் தொலைபேசி இன்னும் விழித்து தான் இருக்கிறது..!

-பாலா